நகை ப்ரியர்களுக்கு ஷாக்! தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! – Kumudam

Spread the love

கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலை, நேற்று குறைந்திருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை

சென்னையில் நேற்று முன்தினம் (செப்.3) ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும், சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.290 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,240-க்கு விற்பனையாகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,920 என்ற விலையை எட்டியுள்ளது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, இன்றைய சந்தையில் வெள்ளியின் விலையும் உயர்வைக் கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *