
தங்கம் விலை கடந்த 20 ஆம் தேதி ஒரு கிராம் ரூ14,285க்கும், ஒரு சவரன் ரூ 1,14,280க்கும் விற்பனை ஆனது. அதன் பிறகு 21 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களாகவே குறைந்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை குறைந்து வந்தது.
அதன் படி நேற்று (24.09.2026) கிராமுக்கு ரூ 135ம், சவரனுக்கு ரூ 1,080ம் குறைந்து, ஒரு கிராம் ரூ 14,000க்கும், ஒரு சவரன் ரூ 1,12,000 விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்த வரையில், கிராமுக்கு ரூ 5-ம், கிலோவுக்கு ரூ 5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ 250க்கும், ஒரு கிலோ ரூ 2,50,000 விற்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,010 க்கும், ஒரு சவரன் ரூ. 1,12,080-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.