Cricket
oi-Yogeshwaran Moorthi
பர்மிங்ஹாம்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியை பார்க்க இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி, நடிகை கீர்த்தி சனோன் மற்றும் நண்பர்களுடன் வந்துள்ளார். இதனால் நடிகை கீர்த்தி சனோன் மற்றும் தோனி இடையிலான நட்பு குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்பின் இந்திய அணி 34 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி நேரில் காண வந்துள்ளார். ஏற்கனவே இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டியை காண தோனி வந்திருக்கிறார். இங்கிலாந்தில் தன்னுடைய விடுமுறையை கொண்டாடி வரும் தோனி, நண்பர்களுடன் போட்டியை பார்க்க வந்தது தெரிய வந்தது. இதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
இதனிடையே தோனியுடன் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும் மைதானத்திற்கு வந்துள்ளார். இவர்களுக்கு இடையிலான நட்பு எப்போது தொடங்கியது என்று ரசிகர்களிடையே விவாதங்கள் நடந்து வருகின்றன. தோனியின் நட்பு வட்டாரத்தில் நடிகை கீர்த்தி சனோன் நீண்ட நாட்களாகவே இருக்கிறார். தோனியின் நெருங்கிய நண்பரான கபிர் பாஹியா என்பவருடன் காதலில் இருக்கிறார்.
இதற்கு முன்பாக தோனி பங்கேற்ற பல்வேறு பார்ட்டிகளிலும் கபிர் பாஹியாவுடன் கீர்த்தி சனோன் வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளன. அதேபோல் தோனியின் மனைவி சாக்ஷியும் அதே மைதானத்தில் தான் இருக்கிறார். அவர் வீடியோவில் காட்டப்படவில்லை.
இதனிடையே தோனி இங்கிலாந்து மண்ணில் முகாமிட்டிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஹண்ட்ரட் லீக் தொடரில் ஆடி வரும் அணிகளின் பயிற்சியாளர்களை தோனி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் தோனி வசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.