இந்தியாவில் E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தியதில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன.
E20 பெட்ரோலால் வாகனங்களின் செயல்திறன் பாதிப்படைகிறது என்கிற விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கிறது.
இந்த விமர்சனங்களுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் பதில்கள் இங்கே…
பாஜகவின் மத்திய பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா:
“இந்தியா தனது மொத்த தேவையில் 20 சதவீத கச்சா எண்ணெயை மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்கிறது. மீதி 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.
பிரதமர் மோடி பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதைப் பற்றிப் பேசும்போது மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

கலப்படம் இல்லாத சுத்தமான பெட்ரோல் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
சுத்தமான பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வரும்? நாட்டில் சுத்தமான பெட்ரோலே இல்லாதபோது, அது வேறு எங்கிருந்துதான் வரும்?”
மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி:
“இன்று நாட்டின் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் E20 எரிபொருள் கிடைக்கிறது.
எத்தனால் கலந்து எரிபொருளை விரும்பாதவர்கள் 100 சதவீதம் சுத்தமான பெட்ரோலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அவர்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.”