திறப்பு விழா சிறப்பு சலுகைகள்
இராஜபாளையம் ஷோரூம் திறப்பை முன்னிட்டு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* தங்க நகைகள் வாங்கும் போது கிராமிற்கு ₹250 குறைவு பழைய தங்க நகை எக்ஸ்சேஞ்சின் மீது கிராமிற்கு ரூ 150 கூடுதல், வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பின் மீது 12.5% குறைவு. (சாலிடேர்கள் தவிர)
* வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தின் (VA) மீது 25% குறைவு.
* வெள்ளி நகைகளின் MRP- மீது 10% குறைவு
ஜிஆர்டி கோல்டன் லெவன் ஃப்ளெக்ஸி ஜுவல்லரி பர்ச்சேஸ் பிளானில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு பரிசுகள் உண்டு.
(இந்த சலுகைகள் தங்க நாணயங்கள் தங்க கட்டிகள் மற்றும் சாலிடெர்கள் நகைகளுக்கு பொருந்தாது மேலும் பிற சலுகைகளுடன் இணைத்து பெற முடியாது.)
திரு. ஜி.ஆர். “ஆனந்த்’ அனந்தபத்மநாபன் அவர்கள் நிர்வாக இயக்குநர், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் கூறுகையில்,”கடந்த அறுபது வருடங்களில் நாங்கள் எட்டிய ஒவ்வொரு சாதனையும் இறைவனின் அருளாலும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாலும் சாத்தியமானது. 67வது ஷோரூமின் திறப்பு, பல தலைமுறைகளாக உருவான அந்த உறுதியான உறவுகளின் பிரதிபலிப்பாகும். எங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். 1964 முதல் எங்களை அடையாளப்படுத்தி வரும் அதே அர்ப்பணிப்புடன் அவர்களின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்வதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.
திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் நிர்வாக இயக்குநர், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அவர்கள் கூறுகையில், “இது எங்களின் 67வது ஷோரூமாக இருந்தாலும் முதல் ஷோரூமைத் திறந்த நாளில் இருந்த அதே உற்சாகமும் பொறுப்புணர்வும் இன்றும் உள்ளது. எங்கள் வளர்ச்சிக்கு காரணமான பணியாளர்கள் வணிகக் கூட்டாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் புதிய ஷோரூமிற்கு வருகை தந்து இந்த இனிய தொடக்கத்தை கொண்டாடி திறப்பு விழா சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்” என்றார்.