'நல்ல மனம் படைத்தவர்கள் யாராவது..!' – இறுதிச்சடங்கு செய்ய காசில்லை; துணைவியின் உடலை வீசிய முதியவர்

Spread the love

கடந்த 21-ம்‌ தேதி, சென்னை திரிசூலம் முக்காணி அம்மன் கோயில் அருகே, கை, கால்கள் கட்டப்பட்டு சாக்குப்பையில் மூதாட்டி ஒருவரின் உடல் காணப்பட்டது.

இப்போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாக்ய லட்சுமி (வயது‌ 75) என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாக்யலட்சுமிக்கு 10 பிள்ளைகள். 15 ஆண்டுகளுக்கு முன்பு, இவரது கணவர் இறந்துவிட்டார்.

பிள்ளைகள் ஆதரவு இல்லாத நிலையில், பூ வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் பாக்யலட்சுமி.

பிணம் - சித்திரிப்புப் படம்
பிணம் – சித்திரிப்புப் படம்

அப்போது அதே பகுதியில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த முகமது ஆசானுடன் (வயது 63) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கும் யாரும் இல்லாததால், பாக்யலட்சுமி, முகமது ஆசான் இருவரும் கணவன், மனைவி போல வாழத் தொடங்கியுள்ளனர்.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடினால், முகமது ஆசான் வேலை செய்து வந்த ஹோட்டல் மூடப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு வேலை பறிபோய் உள்ளது.

போதிய வருமானம் இல்லாமல் பாக்யலட்சுமி, முகமது ஆசான் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான், உடல்நலம் இன்றி பாக்ய லட்சுமி உயிரிழந்துள்ளார்.

முகமது ஆசானிடம் இறுதிச் சடங்கிறகுக் கூட காசில்லாமல் இருந்திருக்கிறது.

இதனால் அவர், ‘யாராவது நல்ல மனம் படைத்தவர்கள் இறுதிச் சடங்கு செய்துவிடுவார்கள்’ என்று பாக்ய லட்சுமியின் உடலை சாக்குப்பையில் கட்டி வீசியிருக்கிறார்.

இது முகமது ஆசானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *