2017 ஆம் ஆண்டு வெளியான “மீசைய முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
சுந்தர் சி – குஷ்பு தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
தவிர யூடியூபர் ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (செப். 17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கானா வினோத், “ஹிப் ஹாப் ஆதி அண்ணன் உடன் ஒரு பன்னிரண்டு வருடமாகப் பயணிக்கிறேன்.
அவர் இசையமைக்கும் எல்லாப் படங்களிலும் எனக்கு வாய்ப்பு கொடுப்பார். இப்போது வரைக்கும் வாய்ப்பு கொடுக்கிறார். கானாவில் இருக்கும் பிரச்னைகளைப் பேச வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.