‘நாட்டாமை குடும்பம்’ பச்சை குத்திக்கோங்க: சரத்குமார் வித்தியாச கோரிக்கை|‘Green Card’ to Meet Sarathkumar? His Tattoo Idea Sparks Buzz

Spread the love

நடிகர் மற்றும் பாஜக நிர்வாகி சரத்குமார் தன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் சரத்குமாரின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், “எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் பச்சைக் குத்தும் எண்ணம்.

“நாட்டாமை குடும்பம்’ எனப் பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

இது நமது குடும்ப அடையாளமாக இருக்கும்.

நாட்டாமை குடும்பம் - பச்சை

நாட்டாமை குடும்பம் – பச்சை

என்னைச் சந்திக்க வருவோருக்கு கிரீன் கார்டு போல, கையில் பச்சைக் குத்தி இருந்தால் எளிதில் நேரடியாகவே சந்திக்கலாம்.

விரும்புபவர்கள் பச்சைக் குத்திக் கொள்ளலாம். வற்புறத்தவில்லை” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர், தங்களுடைய கையில் ‘நாட்டாமை குடும்பம்’ என்று பச்சைக் குத்தி கொண்டனர்.

சரத்குமாரின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று ‘நாட்டாமை’. இதைக் குறிக்கும் வகையிலேயே இந்தப் பெயரைத் தேர்வு செய்துள்ளார் சரத்குமார்.

ஆதரவாளர்களிடம் சரத்குமார் இப்படியொரு கோரிக்கையை வைத்துள்ளது சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *