“மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களை இயக்கிய ரத்னகுமார் ’29’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார்.
விது – ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜீஸ்குவாட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
மே 8 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஏப்ரல்.29) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ், ” ரத்னகுமார் (இயக்குநர்) ரொம்ப நாட்களாக சக போட்டியாளனாகவே இருந்திருக்கிறான்.
நானும், ரத்னாவும் முதல் படம் பண்ணுவதற்காகத் தெரு தெருவாக சுத்தியிருக்கிறோம். அந்த சமயத்தில் தான் ‘பீட்சா’ படம் வெளியானது.
அந்தப் படம் தான் எங்களை போன்றவர்களுக்கு கதவைத் திறந்து வைத்தது. இன்றைக்கு இருக்கும் நிறைய இயக்குநர்களுக்கும் அந்தப் படம் கதவைத் திறந்து வைத்தது.
அந்தப் படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் சார் திறந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் நிறைய ஷார்ட் ஃபிலிம்களை ரிலீஸ் செய்தார்.