'நான் அவுட் ஆகியிருந்தாலும் இந்த டீம் பந்தயம் அடிச்சிருக்கும்!' – விராட் கோலி பெருமிதம்!

Spread the love

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.

கோலி
கோலி

ஆட்டநாயகன் விருதை வென்ற கோலி பேசுகையில், ‘நான் இப்படியான தருணம் பற்றி நிறைய கனவு கண்டிருக்கிறேன். போட்டியை வெல்கையில் களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுக்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்திருக்கிறது.

நிறைய இளம் வீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் என்னுடைய ஆட்டம் மேம்படவும் காரணமாக இருக்கிறார்கள். அணிக்கு என்னுடைய பங்களிப்பை தவறாமல் கொடுக்க முடிவதில் மகிழ்ச்சி. நாங்கள் புள்ளிப்பட்டியலில் முதலில் முடிக்க நினைத்தோம். அதை செய்தோம்.

கோலி
கோலி

நீங்கள் எந்த அணியுடன் இறுதிப்போட்டியில் ஆட விரும்புகிறீர்கள் என கேட்டார்கள். நாங்கள் அப்படி எந்த அணியையும் நினைக்கவில்லை. எல்லா அணியையும் மதித்தோம். ஆனால், கவனம் முழுவதும் எங்கள் அணி மீது மட்டுமே இருந்தது. இன்றைய போட்டியில் நான் அவுட் ஆகியிருந்தாலும் மற்ற வீரர்கள் போட்டியை முடித்திருப்பார்கள். இந்த அணி அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வெங்கடேஷ் கொடுத்த தொடக்கம் பெரிய உதவியாக இருந்தது. எங்களுக்கு 7 ஹோம் மேட்ச்கள் இல்லை. 14 போட்டிகளுமே ஹோம் மேட்ச்களாகத்தான் இருந்தது. நாங்கள் எங்கே சென்றாலும் அங்கே எங்களின் ரசிகர்கள் இருந்தார்கள். இங்கே குஜராத்தில் கூட 90% எங்களின் ரசிகர்களே இருந்தார்கள். அவர்களின் ஆதரவு அளப்பரியது. அவர்கள் முன்பாக கோப்பையை. வெல்வதில் மகிழ்ச்சி’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *