அதேபோல், “என் வீட்டிலிருந்து கரண்ட் எடுத்துக்கோங்க” என்று நான் பேசியதும் தவறாகக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. என் வீட்டிலிருந்து எப்படி அவர்களால் கரண்ட் எடுக்க முடியும்? ‘என் வீட்டிலும் கரண்ட் கட் ஆனாலும் பரவாயில்லை, நானும் இந்த மக்களின் ஒருவனாக நானும் கஷ்டத்தை அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்ற அர்த்தத்தில்தான் நான் அப்படிப் பேசினேன். ஆனால், அது தப்புத் தப்பாக கன்வே ஆகிவிட்டது.
இதற்கிடையில், மகேந்திரனுக்கு பயங்கர திமிர், சின்ன வயதிலிருந்தே அவனுக்கு ஆட்டிடியூட் அதிகம், ஒருமுறை இயக்குனர் மணிரத்னம் சார் முன்னாடியே கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்து சீன் போட்டான் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. இதுபற்றிப் பேசிய நபரை நானே போனில் அழைத்துக் கேட்டேன். அதற்கு அவர், “சும்மா ஒரு ஃபன்னுக்காக அப்படிப் பேசினேன்” என்றார். அவர் பேசி இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இன்றளவும் அதைத் தோண்டி எடுத்து என்னை ‘திமிர் பிடித்தவன்’, ‘யாரையும் மதிக்க மாட்டான்’ என்று சித்தரிக்கிறார்கள்.

மேலும், மக்களின் கஷ்டத்தைப் பார்த்து நான் சிரிப்பதாகவும், ஏளனமாகப் பேசுவதாகவும் மற்றொரு குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ப்ளீஸ், எனக்கு அப்படிப்பட்ட பட்டங்களை எல்லாம் கொடுத்துவிடாதீர்கள். இன்று நான் ஒரு வேளை சோறு சாப்பிடுகிறேன் என்றால் அதற்கு இந்த மக்கள்தான் காரணம். இவ்வளவு முக்கியமான என் மக்களை நான் எப்படி ஏளனம் செய்வேன்? என்னுடன் வேலை பார்த்தவர்களுக்கும், என்னுடன் பழகியவர்களுக்கும் நான் இந்த மக்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது நன்றாகத் தெரியும்.