நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, பாஜக பறக்கவிட துடித்த காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: மு.க. ஸ்டாலின்|m.k.stalin campaign at tirupur

Spread the love

மேலும் திருப்பூரில் செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசுகையில், “தாராபுரம் தொகுதியில் அரசு கல்லூரி அமைப்பது, தந்தை பெரியார் நகர் அருகே உயர்மட்ட பாலம் அமைப்பது, பில்லூர் நீர்த்தேக்கத்தை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவது, தாராபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் அமைப்பது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காவுகொடுக்கத் துணிந்துவிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு 11-வது தோல்வியைக் கொடுக்க வேண்டும். வெகுமானத்திற்காக தன்மானத்தை இழந்து, இனமானத்திற்கு துரோகம் செய்யும் அடிமைக் கூட்டத்திற்கு தமிழ்நாடு சரியான பாடம் புகட்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாசிச பாஜகவும், அடிமை அதிமுக-வும் வேரோடும், வேர் மண்னோடும் வீழ்த்தப்படும்.

மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின்

டபுள் என்ஜின், டப்பா என்ஜின் என வருவது எதற்காக, உரிமைத் தொகையை நிறுத்துவதற்காக, விடியல் பயணத்தை முடக்குவதற்காக, புதுமைப்பெண் போன்ற திட்டங்களை தடுப்பதற்காக, இடஒதுக்கீட்டை பறித்து சமூக நீதியை படுகுழியில் தள்ளுவதற்காக.

இதைத்தான் பா.ஜ.க கூட்டணி மற்றும் மாநிலங்களில் செய்து கொண்டிருக்கிறது. பாஜக மற்றும் அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள். இதை மக்கள் உணர வேண்டும் என்று கூறி முடித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *