நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’: பிரேமலு 2 அப்டேட் கொடுத்த கிரிஷ் ஏ.டி! | Bethlehem Kudumba Unit: Girish A.D. Shares Movie Details & Big Premalu 2 Update

Spread the love

அந்தப் பேட்டியில் அவர், “ஒரு நபர், தன்னைவிட வயதில் மிகவும் இளைய பெண்ணைக் காதலிக்க நேர்ந்தால் என்னவாகும்? நிஜ வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

2019-லேயே இக்கதையின் ஐடியா தோன்றியது. அதோடு கிறிஸ்தவக் குடும்பப் பின்னணி, அவர்களின் அன்றாட வாழ்க்கை என இந்தப் படத்திற்கான உலகத்தை உருவாக்கினேன்.

இக்கதையை உருவாக்கும்போது கதாநாயகனாக நடிகர் நிவின் பாலி என் மனதில் இல்லை. இந்தக் கதாபாத்திரத்தை நான் சுதந்திரமாகவே உருவாக்கினேன்.

Girish AD - Nivin Pauly - Mamitha Baiju

Girish AD – Nivin Pauly – Mamitha Baiju

ஆரம்பத்தில் இந்தக் கதையை நடிகர் ஆசிஃப் அலியிடம்தான் கூறினேன். அப்போது வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்காகத் திட்டமிடப்பட்டு, பின்னர் அது தள்ளிப்போனது. அதன்பிறகுதான் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ உள்ளே வந்தார்கள்.

அவர்களிடம் ‘பிரேமலு’ கதையோடு சேர்த்து இந்தக் கதையையும் கூறினேன். இரண்டுமே பிடித்துப்போகவே, அடுத்தடுத்து படங்களைச் செய்ய முடிவெடுத்தனர்” என்றவர், ‘பிரேமலு 2’ குறித்து, “அது முடிந்துபோன கதை.

நானும் எனது இணை எழுத்தாளர் கிரண் ஜோசியும் தற்போது வேறு ஒரு புதிய கதையில் பணியாற்றத் தொடங்கிவிட்டோம்” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *