`நீங்களாகவே பதவி விலகிடுங்க’ ; கலகத்துக்கு காத்திருக்கும் திமுக; போர்மேகத்தில் அதிமுக! | கழுகார் | Kazhugar updates on CV shunmugam supports politics and tvk

Spread the love

மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில், 69 வார்டுகளில் தி.மு.க-வும், 4 வார்டுகளில் சி.பி.எம் கட்சியும் வெற்றி பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து, ஊழல் புகாரில் சிக்கி தி.மு.க மேயர் பதவி விலகிய நிலையில், துணை மேயரான சி.பி.எம் கட்சியை சேர்ந்த நாகராஜனுக்கு முழு அதிகாரமும் கிடைத்தது. தற்போது சி.பி.எம் கட்சி த.வெ.க-வுக்கு ஆதரவு அளிப்பதோடு, மதுரையில் உள்ள அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களுடன் நெருக்கம் காட்டி வருவதால், தி.மு.க கவுன்சிலர்கள் உச்ச கோபத்தில் இருக்கிறார்கள்.

‘மேயர் பதவிக்கு நம்ம ஆள் ஒருவரை போட்டாக வேண்டும்…’ என்று முயற்சித்து வருகிறார்கள். அதிலும், முன்னாள் அமைச்சர் மூர்த்தியும், மாவட்டச் செயலாளர் கோ.தளபதியும் தங்களுடைய ஆதரவு கவுன்சிலர்களை மேயராக்க காய் நகர்த்தி வருகிறார்கள். கூடிய விரைவில் மாநகராட்சியில் கலகம் செய்ய காத்திருக்கிறது தி.மு.க!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *