நீடிக்காத விலை சரிவு…மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – Kumudam

Spread the love

தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து சவரனுக்கு 1,080 அதிகரித்துள்ளது. 

கடந்த ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை உச்சத்தில் எட்டியிருந்தது. 

சென்னை ஒரு சவரன் ஆபரண தங்கம்  ஒரு  லட்சத்து 30 ஆயிரம்  வரை விற்கப்பட்டது.  இந்த விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்து நிலையில்,  இந்த ஆண்டு தொடக்கத்தில் 10 கிராம் கொண்ட ஆபரணத்தங்கம் ஒரு 1.80 லட்சம் வரை விற்பனையாகி வந்தது. 

சர்வ தேச சந்தை நிலவரங்களே தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன. அமெரிக்க டாலர்கள் மதிப்பு, முதலீகள், வட்டி வீகிதம் போன்ற தங்கத்தின் விலையில் ஏற்றம் இறகத்தை ஏற்படுத்துகின்றன.  பங்கு சந்தையின் நிலவரமும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.  

இந்த நிலை சர்வதேச அளவில் தங்கள் விலை சரிந்து வந்த காரணத்தால் அதன் தாக்கம்  இந்தியாவிலும் எதிரொலித்தது. 

கடந்த 10 ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை கணிசமாக  குறைந்து  ஒரு லட்சத்துக்கு கீழே சென்றது. 

சென்னை  ஆபரண  தங்கத்தின் விலை,  இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.  22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து 11, 600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 

ஒரு சவரன், ஆயிரத்து 80 ரூபாய் அதிகரித்து 92, 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெள்ளி விலை எந்த மாற்றமின்றி  ஒரு கிராம் 175  ரூபாய்க்கும் ஒரு கிலோ,1.75 லட்சம்  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை  சரிந்து வந்ததால்,  நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். குறிப்பாக மத்திய தரப்பு மக்கள் சிறுசேமிப்பு மூலம், நகைகளை வாங்க கடைகளில்  கணக்குகளை தொடங்கினர்.  

மேலும்  விலை குறைவால் மக்களின் நகை வாங்கும் செலவு குறைந்ததாகவும் கூறப்பட்டது.    

ஆனால்  இன்று தங்கம் விலை  உயர்ந்துள்ளது,  மக்களுக்கு  ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அது  மட்டும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயர  வாய்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் விலை உயர்வு மீண்டும் உச்சத்தை எட்ட வாய்பில்லை என்று கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *