நடிகை சமீரா ரெட்டி பாலிவுட்டை விட தென்னிந்தியத் திரையுலகமே சிறந்தது என்று தெரிவித்திருக்கிறார்.
“Hindustan Times’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சமீரா ரெட்டி, “தென்னிந்தியத் திரையுலகில் பணியாற்றியது எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. நான் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றினேன், எனது தனிப்பட்ட அனுபவங்கள் அற்புதமாக இருந்தன.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பயணம் இருக்கும், ஆனால் என்னைப் பொறுத்தவரை, பாலிவுட்டை விடத் தென்னிந்தியத் திரையுலகம் பல மடங்கு சிறந்தது.

பாலிவுட் ரசிகர்கள் ‘ஓ ஆமாம், சமீரா ரெட்டி என்று ஒருவர் இருந்தார்’ என்று சொல்லக்கூடும். ஆனால் தென்னிந்திய ரசிகர்கள் இன்றும் என்னை அன்புடன் வரவேற்று, என் மீது அன்பு வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அவர்கள் இன்றும் என்னை ‘வாரணம் ஆயிரம்’ மேக்னாவாகவே அழைக்கிறார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகும் கிடைக்கும் அந்த வகையான அன்பு இதுவரை இல்லாத ஒன்று.