அரசுப் பள்ளி மாணவர்களின் ஒற்றைக் கனவை அந்த வணிக வளாகங்கள் எப்படி நசுக்குகின்றன என்பதை இந்தச் சமயம் யோசிக்க வேண்டும்.
மருத்துவ இடங்களும் கல்லூரிகளும் பெருகியிருப்பதைக் காட்டிவிட்டு, அது நீட்டின் மகத்துவம் என்று வாதிடுவது யதார்த்தத்தை மறைக்கும் வேலை.
மருத்துவக் கட்டமைப்பு வளர்வதும், மருத்துவ இடங்கள் அதிகரிப்பதும் இந்த நாட்டின் கட்டமைப்பும் மக்களின் தேவையும்தானே தவிர, நுழைவுத் தேர்வின் கருணை அல்ல.
நீட் இல்லாமலும் இந்த இடங்கள் விரிவுபடுத்தப்பட்ட வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம்.
அதனால்தான், மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் சந்திரசேகர் அவர்கள் குறிப்பிடுவது போல, கல்வி என்பது மத்திய அரசின் கைப்பிடிக்குள் சுருங்கிவிடக் கூடாது.
அது மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுவது முற்றிலும் சரியானது.
ஒவ்வொரு மாநிலத்தின் மண்ணுக்கேற்ற கல்வி முறை இருக்கையில் அதை கணக்கில் எடுக்காமல் அந்தந்த மக்களின் துடிப்பும் புரியாமல் மத்தியிலிருந்து திணிக்கப்படும் தேர்வு முறைகள் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரை அசைக்கின்றன என்பதைச் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டிய கருத்து இது.”