நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கை கூட இல்லாத அரசு தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 28? or 48?! -nilgiri government elementary school update.

Spread the love

பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல் தலைமுறையாக கல்வி பயிலும் மாணவர்களின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து வருகின்றனர். அதேவேளையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறவில்லை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதான் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள், ” இந்த‌ மாவட்டத்தில் 501 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நடப்பு கல்வியாண்டான 2026-27 – ல் தற்போது வரை 1- ம் வகுப்பில் 1,689 மாணவர்களும்,‌ 6- ம் வகுப்பில் 2,749 , 11- ம் வகுப்பில் 2924 மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த கல்வியாண்டைக் காட்டிலும் நடப்பு கல்வியாண்டில் 1- ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை மாணவர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 437 ஆக குறைந்திருக்கிறது. குறிப்பாக 28 அரசு பள்ளிகளில் 1- ம் வகுப்பில் புதிதாக சேர்க்கை நடைபெறவில்லை” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *