இயக்குநர் சசி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘நூறு கோடி வானவில்”. இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், மூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாகியும் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படம் நவ. 6-ல், ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இந்நிலையில், ‘நூறு கோடி வானவில்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்.3) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஹரிஷ் கல்யாண், “பாடல், காட்சி, டயலாக் என ஒவ்வொன்றுக்கும் அவ்வளவு உழைப்பு போட்டிருக்கிறோம். ஒரு படைப்பு என்பது பலரின் உழைப்பு.
இந்தப் படம் இவ்வளவு நாள் வெளியாகாமல் இருந்தது வருத்தம்தான். சசி சார் சிறந்த சிந்தனையாளர், சிறந்த டெக்னிஷியன் மட்டும் அல்ல. அவர் ரொம்ப டிசிப்ளின் ஆன மனிதர்.