‘வெளிநாடு உதவி, ஆதரவு யாருக்கு இருக்கிறது’ என்று இந்தியப் பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து நேரடியாக விவாதம் செய்ய மோடியை அழைக்கிறார் ராகுல் காந்தி.
‘விவாதத்திற்கான மேடைதான் நாடாளுமன்றம். ஆனால், அங்கே விவாதம் செய்யாமல் அமளியில் ஈடுபடுகிறீர்கள்’ என்று ராகுல் காந்தியின் விவாத சவாலுக்குப் பதிலளித்திருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Nirmalaji, Since you invoke the Parliament, a sacred institution which has been converted into a stage to push your twisted narratives , the
Monsoon Session began 20 July. The Home Minister did not enter the Lok Sabha for 18 sitting days while the Opposition demanded a statement on police action against students at Jantar Mantar. He walked in on 13 August, stood for Vande Mataram, and the House was adjourned sine die in four minutes.
His own words: "What is the point of going inside?"
Spare us the lecture on staying to hear answers.— Sasikanth Senthil (@s_kanth) November 4, 2026
அமித்ஷா எங்கே?
நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் பக்கத்தில், “நிர்மலா ஜி, உங்களது திரிபுவாதக் கருத்துகளைப் பரப்புவதற்கான ஒரு மேடையாகப் புனிதமான நாடாளுமன்றத்தையே நீங்கள் சான்றாக இழுப்பதால் சொல்கிறேன்.
மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 அன்று தொடங்கியது. ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதல் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியபோதிலும், மத்திய உள்துறை அமைச்சர் 18 அமர்வு நாள்களாக மக்களவைக்குள்ளேயே வரவில்லை.
தயவுசெய்து பாடம் நடத்தாதீர்கள்!
இறுதியாக ஆகஸ்ட் 13 அன்று உள்ளே வந்தவர், வந்தே மாதரம் பாடலுக்கு மட்டும் நின்றுவிட்டுச் சென்றார். அடுத்த 4 நிமிடங்களில் அவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
‘அங்கே உள்ளே சென்று என்ன ஆகப்போகிறது?’ என்பதுதான் அவருடைய சொந்த வார்த்தைகள்.
எனவே, பதில்களைக் கேட்க நாங்கள் இருக்க வேண்டும் என்று தயவுசெய்து எங்களுக்குப் பாடம் நடத்தாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.