நூறு நாள் அங்க என்னம்மா பண்ணுவீங்கனு அப்பாவியாக கேட்டார் அப்பா! – கலங்கும் ஆனந்தி | anandhi shares her affection and love with her father who recently passed away

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆனந்தி கலந்து கொண்டிருந்த நிலையில் அவரது தந்தை திடீரென இறந்து விட, கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறியது நினைவிருக்கலாம்.

தந்தையின் 9 வது நாள் சடங்குகளை சொந்த ஊரான கோயம்புத்தூரில் நாளை முடித்து விட்டு திங்கள் கிழமை சென்னை திரும்புவதாகச் சொன்ன ஆனந்தியிடம் அவரது அப்பா குறித்துக் கேட்டோம்.

“‘மூத்தது மகளா வந்ததும் அவ்வளவு சந்தோஷப்பட்டார்னு அம்மா சொல்வாங்க. ஆனா எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து மத்த சிலர் சொல்வாங்களே, ‘ஃப்ரண்ட்ஸ் மாதிரி இருப்போம்’னு, அப்படியெல்லாம் இருந்ததில்ல. காரணம் எங்க அப்பா கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஸ்ட்ரிக்ட்.

அடிப்படையில வாத்தியார், அதுவும் பி.டி. வாத்தியார்ங்கிறதால டிசிப்ளின் ரொம்ப முக்கியம்கிறதுல கறாரா இருப்பார்.

பையன்கள் மட்டுமில்ல, பொண்ணுங்க சர்க்கிள்ல கூட எனக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் கிடையாது. ஃப்ரண்ட்ஸ் கூட அங்க போறேன், இங்க போறேன்னு வெளியிலல்லாம் சுத்த முடியாது.

இதனால முதல்ல அவரை வில்லனாத்தான் பார்த்தேன். ஆனா போகப்போக அவர் செய்யற எல்லாமே நம்ம நல்லதுக்குத்தான்னு புரிஞ்சுகிட்டேன்.

அதேபோல அதிகாலையில எழுப்பி கிரவுண்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுவார். ஸ்கூல் நாட்கள்ல ஆரம்பிச்ச அந்தப் பழக்கத்தை இப்ப வரை நான் ஃபாலோ செய்திட்டிருக்கேன். ஸ்கூல்ல இருந்தே ஸ்போர்ட்ஸ்ல நானுமே மாவட்ட அளவுல பதக்கங்கள்லாம் வாங்கியிருக்கேன். எல்லா கிரெடிட்டுமே அப்பாவுக்குதான்.

ஸ்ட்ரிக்டா சொசைட்டியை எதிர்கொள்ற அளவுக்கு தன்னம்பிக்கை, தைரியத்தோட வளர்த்து விடணும்னு நினைச்சாரே தவிர, அவருடைய எந்த விருப்பத்தையும் என் மேல திணிக்கலை.

அவர்கிட்ட பெரிசா நான் சண்டை போட்டதா ஞாபகமே இல்ல. பருவ வயசு வரைக்கும் சரியா வளர்த்துட்டதால அதன்பிறகு எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு, சண்டையே இல்ல‌.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *