நெதர்லாந்து நாட்டின் அரசக் குடும்பத்தையே உலுக்கியுள்ள ஒரு பயங்கரமான கொலைச் சதி, கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த நாட்டின் வருங்கால அரசியான இளவரசி கேத்தலினா-அமாலியா மற்றும் அவரது சகோதரி இளவரசி அலெக்ஸியா ஆகியோரைக் குறிவைத்து, “இரத்தக் களரி” (Bloodbath) என்ற பெயரில் தீட்டப்பட்ட இந்தச் சதித்திட்டம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நவீன காலத்திலும் அரச வாரிசுகளின் உயிருக்கு இத்தகைய அச்சுறுத்தல்கள் நிலவுவது சர்வதேசப் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரமான திட்டத்தின் பின்னணியில் இருந்த 33 வயது நபர், ஹேக் நகரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு கோடாரிகளில் இளவரசி அலெக்ஸியாவின் பெயர் செதுக்கப்பட்டிருந்ததுடன், இஸ்ரேலிய உளவு அமைப்பான “மொசாட்’ மற்றும் நாஜி வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.
குறிப்பாக, அந்த நபர் தனது கைப்பட எழுதிய குறிப்பில் இளவரசிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, “இரத்தக் களரி” என்று தலைப்பிட்டிருந்தது இந்தச் சதி எவ்வளவு வன்முறையானது என்பதைக் காட்டுகிறது.