தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்காக காங்கிரஸ் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. த.வெ.கவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என வாக்குறுதி கொடுத்து வந்தது அக்கட்சி.
அதன் அடிப்படையில் காங்கிரஸ்ஸிற்கு கட்சிக்கு அமைச்சர் பதவி கொடுக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் மேலூர் தொகுதியில் போட்டியிட்ட விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் முன்னாள் எம்.பியாக இருந்த விஸ்வநாதன் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். பட்டியலினத்தை சேர்ந்த விஸ்வநாதன் பொது தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருப்பதால் தான் அமைச்சர் பதவி கொடுக்கபட இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.