நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" – ஜக்கி வாசுதேவ்

Spread the love

நேற்று நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டு, அதில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 133 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர்.

கோவை ஈஷா மையத்தைச் சேர்ந்த குழு ஒன்றும் நேபாளத்திற்குச் சென்றிருந்ததாக ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவருடைய எக்ஸ் தளப் பதிவு…

“திபெத் – சீனாவில் உள்ள கிராங் (Gyirong) பகுதியில் மிக மோசமான, சோகமான ஒரு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் எங்களது கைலாஷ் பயணக் குழுக்களில் ஒன்றும் சிக்கிக் கொண்டது.

நேபாளம் வெள்ளப் பெருக்கு
நேபாளம் வெள்ளப் பெருக்கு

என்ன நடந்தது?

அவர்கள் திரும்பக் கிளம்பிய சமயத்தில், இமிக்ரேஷன் அலுவலகத்தில் இருந்திருக்கின்றனர். அப்போதுதான் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் அந்தக் கட்டடமும், நகரின் பெரும்பாலான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிகிறது.

தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவுக் குழுக்கள் உள்பட நாங்கள் அனைவரும் இதனால் மிகுந்த வேதனையடைந்துள்ளோம்.

மீட்புப் பணிகளுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்.

அந்த இமிக்ரேஷன் அலுவலகத்தில் இருந்தவர்கள் யாருடைய இருப்பிடம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

நாங்கள் தயார்

எவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும், சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளில் நேரில் ஈடுபடத் தயாராக இருக்கிறோம்.

எங்களுடைய இந்தப் பயணத்தின் 21 குழுக்களில், 495 பேர் ஏற்கனவே பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனர். 743 பேர் தற்போது திபெத்திலும், 148 பேர் நேபாளத்திலும், 77 பேர் இமிக்ரேஷன் மையத்திலும், 3 தன்னார்வலர்கள் நேபாளத்தின் திமுரே பகுதியிலும் உள்ளனர்.

எனக்கும் வலி

எங்களது குழுவில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும், மற்றும் இந்தப் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிற மக்களுக்கும்… உங்கள் வலியை நான் உணர்கிறேன்.

இந்தத் துயரமான நேரத்தில் நாங்கள் எந்த முயற்சியையும் விட்டுவைக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

தற்போதைய சூழலில் சாத்தியமான அனைத்துச் சிறந்த உதவிகளையும் செய்வதை உறுதிசெய்ய நான் தனிப்பட்ட முறையில் இந்தப் பகுதியில் களத்தில் இருக்கிறேன்.” என்றிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *