நோபல் பரிசு சர்ச்சைக்கு Full Stop… திருமாவளவனை பற்றி பேசியதை வாபஸ் பெற்ற வைகோ! – Kumudam

Spread the love

சமீபத்தில் வைகோவிடம் செய்தியாளர்கள் திமுக சார்பில் முதலமைச்சர் விஜய் கரூர் போகக்கூடாது, பேசக்கூடாது, என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர். ஆனால் கோர்ட்டு திமுகவுக்கு சாட்டையடி கொடுத்துள்ளது. தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் தவெக ஆட்சியில் இடம் பெற்றிருந்தாலும் திமுகவுடன் கூட்டணி தொடர்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்து குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்திருந்த வைகோ அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டிய கருத்து அவ்வளவு தான் என்றார்.

இதற்கு அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாளவளவனிடம் வைகோ உங்களுக்கு நோபல் பரிசு தரலாம் என்று கூறிய கருத்து குறித்து கேட்ட போது நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தமைக்கு நன்றி பரிசு கிடைத்தாலும் அவருக்கு நன்றி என்று தெரிவித்தார். இருவரிடையேயான பேச்சு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.அப்போது அவர் கூறியதாவது, திருமாவளவனுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று கிண்டலடித்ததை வாபஸ் பெற்றுக்கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு திருமாவளவன் ஊக்கம் அளித்துதான் வந்திருக்கிறேன் என்னால் இயன்ற அளவுக்கு பக்கபலமாக தான் இருந்திருக்கிறேன். எதிர்காலத்திலும் அப்படிதான் இருப்பேன். நான் பேசிய வார்த்தையால் அவர் மனம் புண்பட்டிருந்தால் நான் பேசிய என் வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

விசிக தலைவர் திருமாவளவனை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. எனக்கு இம்மியளவு கூட அவர் மீது கோபமோ வருத்தமோ கிடையாது. திருமாவளவன் ஒரு நல்ல தலைவர் என்று கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *