`பகையை மட்டுமே சம்பாதித்துள்ளேன்; காவல்துறையில் எனக்கு…’- டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆய்வாளர் திலீபன்

Spread the love

பாலியல் குற்றாச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆறுமுகநேரி காவல் ஆய்வாளராக பணிபுரிந்த திலீபன், கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர். இவர், கடந்த 2023-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், அருமனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் அயல் பணிக்காக  சென்னை பொருளாதார குற்றப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். அந்த நேரத்தில் அவர் எவ்வித முன் அனுமதியோ, தகவலோ இன்றி தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்துள்ளார். அதன்படி, மொத்தம் 555 நாட்கள் பணிக்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மருத்துவக் குழுவின் முன்பு ஆஜராகாமலும் இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்ஸாட்வில் திலீபன்

இன்ஸாட்வில் திலீபன்

இதன் காரணமாக இவரின் பதவி உயர்விலும் கால தாமதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், கடந்த 2025-ம்  ஆண்டு 2  ஆண்டுகள் கால தாமதமாக அவருக்கு காவல் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. தொடர்ந்து, அவர் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி நியமனம் செய்யப்பட்டார்.  அங்கு சில மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில், சக பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அந்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விளக்கமும் அளித்திருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *