“பட்டாசு வெடிப்பதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை”- பூவுலகின் நண்பர்கள்| “The conditions imposed for bursting firecrackers were not properly followed” – Poovulagin Nanbargal

Spread the love

இந்தியா முழுவது தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதேநேரம், வாணவேடிக்கை, பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களால் காற்று மாசு முந்தையை ஆண்டுகளைவிட அதிகரித்திருக்கிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் தகவலில், “முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் சராசரியாக காற்று மாசுபாடு அதிகரித்திருப்பது மாசு கட்டுப்பாடு வாரிய அறிக்கையில் தெரியவந்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதைச் சொல்ல அறிக்கைகள் தேவையில்லை.

பட்டாசு வெடிப்பது ஒரு Mass Suicide Mission என்பதை அனைவரும் உணர வேண்டும். மாநிலத்திலேயே சென்னையில் (வளசரவாக்கத்தில் AQI 343) காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது என TNPCB தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளின் காற்று தரக் குறியீடு சராசரியுடன் ஒப்பீட்டால் 2026ல் காற்று மாசுபாடு அதிகரிதுள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், அதனுடன் இணைக்கப்பட்டப் பதிவில், “தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் உள்ள 39 கண்காணிப்பு மையங்களில் 2024, 2025 மற்றும் 2026-ம் ஆண்டுகளுக்கான காற்றுத் தரக் குறியீட்டு (AQI) தரவுகளின் ஒப்பீட்டு பகுப்பாய்வு, 2026-ம் ஆண்டிலும் காற்றுத் தரக் குறியீட்டு அளவுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *