பட்டியல் சாதியினரின் உடல் பொது சுடுகாட்டில் அடக்கம்; வாழ்வாதாரத்தை முடக்கி வஞ்சிக்கும் ஆதிக்கச்சாதி? | erode graveyard caste discrimination controversy

Spread the love

கூட்டத்திற்குள் நுழைந்த ரிதுவரன் என்ற இளைஞன், “ஊர் பொது மயானத்தில் நீங்கள் உடல்களை அடக்கம் செய்வதாக இருந்தால், எங்களின் தோட்டத்திற்கு உங்களை வேலைக்கு அனுமதிக்க முடியாது. இதுதான் ஊர் மக்களின் தீர்மானம். மற்றபடி நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்” என மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இருவர், கையெடுத்துக் கும்பிட்டும் இளைஞனின் காலில் விழுந்தும் கெஞ்சியிருக்கிறார்கள். ஆனால், அதைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.

அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சென்னியின் உடலை அதே பொது மயானத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள். மேலும், இந்தத் தீண்டாமை கொடுமை குறித்து காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளனர்‌.

பொது மயான பிரச்சனை

பொது மயான பிரச்சனை

இது தொடர்பாக திங்களூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனச் சமூகநீதித்துறை மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களாக பட்டியல் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி, வெளிப்படையாகவே வஞ்சித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்துப் பகுஜன் சமாஜ் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறுகையில், “பெரும்பாளி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பட்டியல் சமுதாய மக்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் வெறும் 15 குடும்பங்கள்தான் இருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *