ஒரு புத்தகம் திறந்திருப்பதுபோல் கட்டடத்தை வடிவமைத்திருக்கிறோம். இதுமட்டுமின்றி, ரூ.1,200 கோடி மதிப்பில் 12 லட்சம் சதுர அடியில் அமைந்த தெலங்கானா தலைமைச் செயலகத் திட்டத்திற்கான போட்டியிலும் நானும் பங்கேற்றிருக்கிறேன்.
30 கட்டடக் கலைஞர்கள் கலந்துகொண்ட அந்த 12 மாதப் போட்டியின் முடிவில் எனது வடிவமைப்பு தேர்வானது.அதை வெறும் 26 மாதங்களிலேயே கட்டி முடித்தோம்.
அமெரிக்காவில் படித்துப் பணியாற்றிய அனுபவம் இது போன்ற மிகப்பெரிய கட்டடங்களை உருவாக்க எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

ஆந்திர அரசு திட்டங்கள், சாஃப்ட்வேர் பூங்காக்கள் மற்றும் தெலங்கானாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான 5 பள்ளிகள் எனப் பல அரசுத் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது ஒரு ஆட்சியும், திறக்கப்பட்டபோது வேறு ஆட்சியும் இருக்கிறது. ஆனால் திரு. மு.க. ஸ்டாலின் மற்றும் தற்போதைய முதல்வர் இருவருமே எனது வேலையை மிகவும் பாராட்டி ஆதரவு அளித்தனர்.
மருத்துவர்களுக்கு நோயாளி யாராக இருந்தாலும் சிகிச்சை அளிப்பதே கடமை என்பது போல், நாங்களும் அரசியல் கடந்து நாட்டிற்குச் சேவை செய்பவர்கள். எனது கட்டடக்கலைத் திறனை வெளிப்படுத்த அரசாங்கம் ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்தது. நாட்டிற்குச் சேவை செய்வதே எனது முதன்மை நோக்கம்” என்றார் நெகிழ்ச்சியாக…