பரிமிளா & கோ திரைப்பட விமர்சனம் – Kumudam

Spread the love

குமுதம் விமர்சனக் குழு

செத்தவன் ரவுடி, போதைப் பொருள் கடத்தல்காரன், கொலைகாரனும் கூட கொலை பண்ணியது யார்? புருஷனா, பொண்டாட்டியா, மூத்த மகளா. ரெண்டாவது பொண்ணா, மாமாவா, சித்தப்பாவா, காதலனா என ஒரு மிடில் கிளாஸ் குடும்பமே குழம்பித் தவிக்குது. ஒவ்வொருவரும் மற்றவர் மீது காரணமே இல்லாமல் சந்தேகப்பட போலீஸுக்கு சந்தேகமெல்லாம் இறந்தவனின் நண்பர்கள், அவனது காதலி, தொழில் பார்ட்னர்கள். பழைய விரோதிகள், பெத்த அம்மா, அவளோட கள்ளக்காதலன்னு லிஸ்ட் போய்கிட்டே இருக்குது.

அவன் மரணம் பலருக்கும் நிம்மதி என்றாலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மிஷ்கினுக்கு மட்டும் பெரிய தலைவலி கோடாரி தைலத்தைத் தலையில் தேய்த்துக்கொண்டு அவர் மூளையைக் கசக்க நமக்கு அவர் மேலயும் ஒரு சந்தேகம் வருகிறது. உண்மையில் கொலை செய்தது யார்? கிரைம், சஸ்பென்ஸ், த்ரில்லர் மாதிரியான கதையை கொஞ்சம் காமெடியாக சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ், நினைத்தது நடந்ததா?

ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின் யோகிபாபு, சிறப்பாக நடித்திருக்கின்றனர். சாண்டி, சிங்கம் புலி, பக்ஸ் நல்ல சப்போர்ட்டிங் கேரக்டர்கள். பட்டையைக் கிளப்பியது மகள்களாக வரும் சஞ்சனா, அனந்திகா பாத்ரூமில் பரிமளா & கோ குளிக்க சண்டை போடுவது முதல், போட்டி போட்டுக் கொண்டு இருவரும் இரண்டு கிரிமினல்களை காதலிப்பது வரை டிபிகல் மிடில் கிளாஸ் டாம் அண்ட் ஜெர்ரி சிஸ்டர்ஸ் பாண்டிராஜ் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் எதிர்பார்க்க வில்லை. ரவுடிகளை வைத்துப் பெண்களை இழிவுபடுத்துவது அரு வருப்பு. டிரக் மாஃபியா படத்தில் சராசரி பரிமளா குடும்பம் ஓட்டவே இல்லை. 

‘பரிமளா & கோ’ -சிரிக்காமல் பார்க்கலாம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *