அகிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரித்வி ஷாவை ‘அன்ஃபாலோ’, செய்யவோ அல்லது தங்களது நிச்சயதார்த்தப் புகைப்படங்களை நீக்கவோ இல்லை.
அகிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில், “நான் பலமுறை ஏமாற்றப்பட்டேன், இருந்தும் நான் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. வாழ்க்கையில் ஒரு படி மேலே எடுத்து வைத்த பிறகும் இப்படியா என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

எல்லாமே உண்மைதான். வெளியாகும் ஒவ்வொரு வதந்தியும் உண்மைதான். அவரைப் பற்றி நீங்கள் சமூக வலைத்தளங்களில் பார்ப்பது அத்தனையும் உண்மை” என்று பதிவிட்டிருந்தார்.
அகிருதி அகர்வால் ஒரு நடிகை மற்றும் சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர் ஆவார். 2026-ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா இடம்பிடித்திருந்தார்.
ஆனால், மோசமான உடற்தகுதி மற்றும் ஃபார்ம் அவுட் காரணமாக இந்த சீசனில் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.