Vishnu Vishal: என் திருமண வாழ்க்கையிலும் சில தவறுகள் நடந்துள்ளன! விஷ்ணு விஷால் உருக்கம் | Vishnu Vishal says about Jananayagan movie

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

சென்னை: ஜனநாயகன் பிரச்சனை முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி, ஜனநாயகன் தமிழகத்தின் பெரிய கொண்டாட்டமாக இருக்கப்போகிறது என நடிகர் விஷ்ணு விஷால் பதிலளித்துள்ளார்.

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி 2.

கடந்த 2022-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ படம் பேசிய கருத்துகளும், சுவாரஸ்யமான திரைக்கதையும் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது அந்தக் கதையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Vishnu Vishal

இந்நிலையில் மதுரை வெற்றி திரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் விஷ்ணு விஷால் இயக்குனர் உள்ளிட்ட பட குழுவினருக்கு மதுரை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து திரைப்பட முடிவில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் விஷ்ணு விஷால், கில்லி படத்தின் அப்படி போடு பாடலுக்கு குழந்தைகளுடன் நடனம் ஆடி மகிழ்ந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதுரை மக்களிடையே கட்டா குஸ்தி 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பார்ட் 1 படத்தை விட பார்ட் 2 பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

முதல் படம் முதல் தற்போது வரை எனக்கு அனைத்தும் ஞாபகம் இருக்கிறது. 17 வருடம் தமிழ் சினிமாவில் இருந்து விட்டேன், அதற்கு முழு காரணம் வெண்ணிலா கபடி குழு தான்.

கட்டா குஸ்தி பாகம் ஒன்றை ரிலீஸ் செய்தபோது பயமாக இருந்தது. தற்போது கட்டா குஸ்தி 2 படம் நன்றாக இருக்கிறது என்று ரிப்போர்ட் வந்தது, இன்று மக்களை சந்தித்தபோது மகிழ்ச்சியாக எமோஷனலாக உள்ளது. மதுரை எப்போதும் நல்ல படங்களுக்கு சப்போர்ட் இருக்கும்.

வாழ்க்கையில் சினிமாவில் நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும், கெட்ட விஷயங்களை சொல்லிக் கொடுத்து விடக்கூடாது. நடிக்கும் அனைத்து படத்திலும் மெசேஜ் வைக்க முடியாது. பொழுதுபோக்குக்குள் நல்ல மெசேஜ் வைக்க முடியும் என்றால் அது நன்றாக இருக்கும்.

காலம் காலமாக ஆண்கள் தான் எல்லாம் என்ற நினைப்பு அனைவரிடமும் இருக்கிறது. பார்ட் 1 கதை கேட்கும் போது எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. நல்ல படங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் மக்கள் என்ஜாய் செய்யும் போது நல்ல மெசேஜ் சொல்ல வேண்டும். அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

கணவன் வீட்டிலிருந்து வீட்டு வேலைகளை பார்ப்பது குழந்தைகளை பார்ப்பது சமையல் செய்வது என்று செய்யும் போது இந்த சமூகம் அந்த கணவனை லூசராக பார்க்கிறது.

வீட்டில் இருந்து வேலை பார்ப்பது ஒரு சூப்பர் பவர். வீட்டில் இருந்து அனைத்து வேலைகளையும் பார்ப்பது அவ்வளவு எளிது கிடையாது. சின்ன வயதிலிருந்தே எங்க அம்மாவை நான் பார்க்கிறேன்.

வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால் யார் என்பதை காட்ட வேண்டும் என்று நினைத்தோம். இந்த மாதிரி கதாபாத்திரம் எடுத்து செய்யும் போது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

சினிமா ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்ளும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு நான் இயக்குநரை தான் பாராட்ட வேண்டும்.

கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்தல் என்பதுதான் ஈக்குவாலிட்டி. ஈக்குவாலிட்டி என்பது தற்போது குறைவாக உள்ளது. எனக்கும் ஒரு திருமணம் பிரேக் ஆனது.

அந்த திருமண வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. அதில் நான் எந்த இடத்தில் தவறு செய்தேன், எதை செய்திருக்கக் கூடாது என்பதை கற்றுக் கொண்டேன். என்னை மாதிரி யாரும் வரக்கூடாது.

ஒரு பிரச்சனை வந்தால் கணவன் மனைவி யாராக இருந்தாலும் பொறுமையாக எடுக்க வேண்டும். முடிவு எதையும் உடனடியாக எடுத்து விடாதீர்கள். நேரம் கொடுக்க வேண்டும், நேரம் பல விஷயத்தை மாற்றும். டைம் கொடுக்கும் போது புரிதலை மாற்றும்.

டெக்னாலஜி மாறும் டைம் மாறும் டெக்னாலஜி உடன் சில விஷயம் மாறும், மாற்றம் ஒரு பெர்மனண்ட் அதில் எந்த மாற்றமும் இல்லை. லைப் மாறும் போது நாம் மாறிக்கொள்ள வேண்டும், ஒரு வருஷம் இரண்டு வருஷத்துக்கு முன்பு ரீலில் படம் எடுத்தோம் தற்போது டிஜிட்டலில் படம் எடுக்கிறோம்.

தற்போது நடப்பது ரீல்ஸ் யுகம் அதை நாம் அக்செப்ட் செய்ய வேண்டும். அது பொருத்து நாம் வாழ வேண்டும் .ரீல்ஸ் மட்டும்தான் வாழ்க்கை கிடையாது, ரீல்சைத் தாண்டி வாழ்க்கை உள்ளது அதை நாம் என்ஜாய் செய்ய வேண்டும்.

ஜனநாயகன் படத்திற்கு மிகவும் காத்துக் கொண்டிருக்கிறோம், ஜனநாயகன் படம் முதல்வர் விஜய் சாரின் கடைசி படம், அதை திரையரங்கில் பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறேன். சில காரணங்களுக்காக மிஸ் ஆகிவிட்டது, எனக்கு தெரிந்து விஜய் சாரின் ஜனநாயகம் படம் பயங்கரமான செலிப்ரேஷன் ஆக இருக்கப்போகிறது. நானும் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *