Visually Challenged Wire Weaver in Tirunelveli Seeks Electricity for His Shop | `அதான் கை, கால் நல்லா இருக்கே!’ – வயர் பின்னும் விழிச் சவால் மாற்றுத் திறனாளி ராஜா வைக்கும் கோரிக்கை

Spread the love

“தொழில் போட்டி அதிகமா இருக்கு, பெருசா வருமானம் இல்லனாலும் வயத்து பொழப்புக்கு போதுமானதா இருக்கு, அதனால சில ஏமாற்றங்களை பெரிசா மனசுல எடுத்துக்க மாட்டேன்.

தொழில் போட்டியினால எனக்கு அப்புறம் கடை ஆரம்பிச்ச எல்லாருக்கும் கரண்ட் வசதி கிடைச்சிருச்சு, என் கடைக்கு இன்னும் கரண்ட் வசதி கிடைக்கல. பலமுறை கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்துட்டேன், ஆனா கண்டுக்கவே இல்ல.

ராத்திரி நேரம் கடை எங்க இருக்குன்னு பல பேருக்கு தெரியாது. இதனால பல ஆர்டர் கைநழுவி போயிருக்கு.

அதுபோக மர பிரேமில் டிரில்லிங் மிஷின் வச்சி ஓட்டை போட கரண்ட் வேணும். டிரில்லிங் மிஷின் வச்சு ஓட்டை போட மத்த கடைல கொடுத்தா, “இந்தா தாரேன், அந்தா தாரேன்”னு 5 நிமிஷம் வேலையை இழுத்து அடிக்கிறாங்க” என தனது வேதனையை வெளிப்படுத்துகிறார் வயர் பின்னும் மாற்றுத்திறனாளி ராஜா.

பார்வை திறன் சவால் இருந்தாலும், நம்பிக்கையாக தொழில் செய்து பயணிக்கும் ராஜா போன்றவர்கள் நமக்கு சிறந்த முன்னுதாரணம். அரசு இவர்களுக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்தாலே, கூடுதல் நம்பிக்கையுடன் வாழ்வை முன்நகர்த்தி செல்வார்கள்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *