இது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டுள்ள கோரிக்கையில், ‘நான் முதல்வன்’ திட்டம் மட்டுமன்றி, தமிழக அரசின் பல்வேறு முக்கியத் துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களும் தற்போது பீதியில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக:
-
ஸ்டார்ட்அப் டிஎன் (Start-up TN)
-
கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance TN)
-
மாநிலத் திட்டக் குழு (State Planning Commission)
-
நான் முதல்வன் துறைகள் (Naan Mudhalvan Verticals)
-
ஐடிஎன்டி ஹப் (ITnT Hub)

-
டிஎன் வி சேஃப் (TN We Safe)
-
செய்தி மக்கள் தொடர்புத் துறை (TNDIPR)
-
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை (SPI)
-
விழுதுகள் (Vizhuthugal)
-
தாட்கோ (Tahdco)
மற்றும் இதர ஆலோசகர்கள் (Consultants) எனப் பல தரப்பினரும் இந்த பணிநீக்க அச்சுறுத்தலால் கலக்கத்தில் உள்ளனர்.
முதனிலைத் தேர்வு மே 24 அன்று நடைபெற உள்ளதால், இந்தக் கடைசி 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை. கல்வி வழிகாட்டுதலுக்கு மட்டுமல்லாமல், இறுதிக்கட்டத்தில் தேர்வர்களின் நம்பிக்கையை வளர்க்கவும், நிலையான வழிகாட்டி ஆதரவு மிகவும் அவசியம். எனவே, அரசு அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை முடக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.