“பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை.. கிழிந்தால் புதிய பேக் தரவேண்டும்”.. டெண்டர் வெளியிட்டது தமிழக அரசு | Tamil Nadu Government Floats Tender to Procure 55.93 Lakh Free School Bags for Students

Spread the love

Tamilnadu

oi-Vignesh Selvaraj

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகப் பைகள் வழங்க தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. 55.93 லட்சம் புத்தகப் பைகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தக பை வழங்கும் திட்டத்தைத் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 2026-27, 2027-28 ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.103.81 கோடி மதிப்பீட்டில் 55.93 லட்சம் புத்தகப் பைகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

Tamil Nadu Government Floats Tender to Procure 55 93 Lakh Free School Bags for Students

10 முதல் 20 கிலோ வரை எடை தாங்கும் திறனை கண்டறிய பைகளை ஒரு மணி நேரம் தொங்கவிட்டு தரம் சோதிக்கப்படும் என்றும் 6 மாதம் உத்தரவாதம் அளிக்கப்படும் நிலையில், பழுதடைந்தால் புதிய பைகள் மாற்றித்தர வேண்டும் என்றும் டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் புத்தகப் பை தயாரிப்பில் அனுபவம் உள்ள பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம் என்றும் நீல நிறத்தில் வடிவமைக்கப்படவுள்ள பைகளின் உட்புறத்தில் பள்ளிக்கல்வித் துறை இலச்சினை இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *