திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்றம் அனுமதி | Supreme court allows opposition party to put new case

Spread the love

இதனையடுத்து, இந்த விவகாரம் நீதிபதி அரவிந்த் குமார் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் மற்றும் இந்து தர்ம பரிஷத் சார்பில் வழக்கறிஞர் ஜெய் சுகின் ஆகியோர் ஆஜராகி கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

உயர் நீதிமன்றத்தில் தீபம் ஏற்றுவோம் எனக் கூறிவிட்டு, தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு திட்டமிட்டே மீறியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இதற்குப் பதிலளித்த மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், “உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஆட்சியர் மேற்கொண்டார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக அந்தத் தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை. இதற்கான காரணங்களை விளக்கி, நீதிமன்றம் கூறியபடி மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆட்சியர் தரப்பு விளக்கத்தை ஏற்க மறுத்த மனுதாரர்கள், அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து  அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். அதே சமயம், “உத்தரவு மீறப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தால், அது நிச்சயம் பரிசீலிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்” என நீதிபதிகள் உறுதி அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், தமிழக அதிகாரிகள் மீது விரைவில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மீண்டும் சட்டரீதியான சூடுபிடித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *