பாக்யராஜ் : `உதவியாளர்களை ‘முருகா’ன்னு தான் அழைப்பார்!' – ‘பாக்யா’ அனுபவம் பகிரும் தஞ்சை ரவிராஜ்

Spread the love

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிற சூழலில், பாக்யராஜ் குறித்து அவர் நடத்தி வந்த ‘பாக்யா’ இதழில் ஆசிரியர் பிரிவில் பணிபுரிந்த தஞ்சை ரவிராஜிடம் பேசினோம்.

‘’பாக்யராஜ் சார் கிட்ட உதவி இயக்குநரா இருந்த செம்புலி ஜெகன் ‘பாக்யா’ பத்திரிகை பணிக்கு பத்திரிகையில் அனுபவமிக்க ஒருத்தர் வேணும்னு டைரக்டர் கேட்டார்னு என்னை அவரிடம் அழைத்துச் சென்றார். நுங்கம்பாக்கத்திலுள்ள அமராவதி இல்லத்துக்குப் போனேன். வீட்டுக்கு அம்மா பெயரை வச்சிருந்தார்,

முதன் முதலா என்னைச் சந்திச்சதும் ‘எந்தப் படங்களில் ஒர்க் பன்ணியிருக்கீங்க, யாரோட அசிஸ்டன்ட்னுதான் கேட்டார். உதவி இயக்குநர் பணிக்கு வந்திருக்கிறதா நினைச்சுக் கேட்டார். பத்திரிகைக்கு வந்திருக்கேன்னு சொன்னதும், ‘நீங்க ஜெயலலிதா  மேடத்திடம் செகரட்டியா இருந்தீங்கனு ஜெகன் சொன்னார், மேடத்தைப் பத்தி ஏதாவது எழுதுங்கன்னு சொல்லி அவரே டைட்டிலும் தந்தார்.

ரவிராஜ் கே. பாக்யராஜுடன்

இருபது அத்தியாயங்களுக்கு மேல் அந்த தொடர் போச்சு. தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அவருடைய கையெழுத்து அவ்வளவு அழகா இருக்கும். பாக்யாவில் கேள்வி பதில் அவர்தான் எழுதுவார். நக்கல் நையாண்டின்னு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் அந்தப் பகுதி. கதை, ஜோக்ஸ்லாம் சமயத்துல அவரே எழுதுவார்.

வேலை செய்கிற ஊழியர்களுக்கு வீட்டுச் சாப்பாடு கிடைக்கும். சாப்பாடு பரிமாறுகிறவர்கள் சாப்பிட்டுட்டுதான் பரிமாறணும். பசங்க பாண்டிராஜ் பாக்யாவில் வேலை பார்த்தவர்தான்.

தன்னுடைய உதவியாளர்களை அவங்க பேர் வேற என்னவா இருந்தாலும் முருகானுதான் கூப்பிடுவார். முருக பக்தர்ங்கிறதால் இப்படிக் கூப்பிடுவார். மூணு நாள் முன்னாடி பேசியிருந்தேன். குஷ்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு வந்த பிறகு வாங்க, ஒரு புத்தகம் கொண்டு வர்ற விஷயமாப் பேசணும்னு சொல்லியிருந்தார், அதற்குள் இப்படியொரு துயரச் செய்தி” எனக் கலங்குகிறார் ரவிராஜ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *