கோவை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க-வை பொறுத்தவரை அவர்களின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதன் தலைவர் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். தி.மு.க எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறது. ஆய்ந்த கருத்துக்களை சொல்லி நாட்டின் வளர்ச்சிக்கு உதவினால் சரியாக இருக்கும். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்ற உணர்வு தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. விசில் சின்னத்தை உலகத்துக்கு கொண்டு செல்ல குழந்தைகள் பணியாற்றி இருக்கிறார்கள். கட்சி கொடியினை மாணவர்கள் கையில் ஏந்தி வருவதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல.
குடியரசு தலைவரும், ஆளுநரும் ஒன்றுதான். குடியரசு தலைவர் நாட்டின் முதல் குடிமகன், ஆளுநர் மத்திய, மாநில உறவுகளை ஏற்படுத்துபவர். இதைச் சொன்னதுக்கு கிண்டல் செய்தார்கள். ‘ஆட்டுக்கு எப்படி வால் தேவையில்லையோ, நாட்டிற்கு கவர்னர் தேவையில்லை’ என கிண்டல் செய்தார்கள். நாங்கள் அது போல பண்ணவில்லை. எங்களை பொறுத்தவரை, கலைஞர் பட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் வந்தபோது, இரு முறை பேசிய கீதம் ஒலிக்கப்பட்டது, அது தவறில்லை. அதுபோல தமிழ் தாய் வாழ்த்து, தமிழ் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்… எந்த இடத்தில் இருந்தாலும் கொண்டு வர வேண்டும் என்பது தலைவரின் லட்சியப் பயணம். அதை தெளிவாக ஆளுநர் செய்தார்.