"பாஜகவின் ஆதரவோடு அதிமுகவும், திமுகவும் ஆட்சியமைக்க முயல்கிறது" – அமைச்சர் நிர்மல்குமார்

Spread the love

மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல்குமார், தவெக எம்எல்ஏ முஸ்தபா தன்னிடம் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க பேரம் பேசியதாக வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ”எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவது குறித்து ஏற்கனவே அதிமுக, திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த நபரைக் கைது செய்திருக்கிறார்கள்; எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு அனைத்து இடத்திலும் முயற்சி நடக்கிறது.

இப்போது அந்த முயற்சியை உதயநிதியும், ஸ்டாலினும் பெரிய அளவில் முடக்கிவிட்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் திரும்பச் சொல்வது இத்தனை மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும் என்கிறார்கள்.

முஸ்தபா
முஸ்தபா

அவர்களின் ஒரே முயற்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக-வின் பின்புலத்தோடு பாஜகவின் ஆதரவோடு மீண்டும் எடப்பாடியும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது. அவர்களிடம்  ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒவ்வொருவரிடம் உள்ளது; அதை வைத்து அவர்கள் செய்யக்கூடிய ஒரே முயற்சி இதுதான். மற்றபடி அவர்களால் வேறு எதையும் செய்ய முடியாது.

எங்களுடைய எம்.எல்.ஏ-க்களுக்கு 70 கோடி வரைக்கும் ஆஃபர் கொடுத்து மாட்டிக்கொண்டு கைதாகி நிற்கிறார்கள். அதிகபட்சமான பணம் எம்எல்ஏ பேரத்தில் மாட்டியுள்ளது. ஹவாலா பணம் பயன்படுத்தியுள்ளனர். பெங்களூரில் பணத்தை சப்ளை பண்ணியிருக்கிறார்கள். எல்லா விசாரணையும் நடந்து வருகிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இடைத்தேர்தலில் திமுக – அதிமுக இருவரும் சேர்ந்து பொது வேட்பாளர் நிறுத்துவதாகத்தான் திட்டம் திமுகவிற்குள் கனிமொழி, நேரு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அது கைவிடப்பட்டது.

இப்போது அடுத்து வரும் இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவும் சேர்ந்து பொது வேட்பாளரைப் போடலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். அதிலும் உட்கட்சியில் எதிர்ப்பு கிளம்பினால் மட்டுமே தனியாக வேட்பாளர் நிறுத்தப்படலாம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *