‘பாஜகவை வலுப்படுத்த விரும்புகிறேன்’- மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எல். முருகன் | Union Minister of State L. Murugan has resigned from his position

Spread the love

மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் தலைமையின் கீழ் பாரத மாதாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் சேவை செய்வது எனது வாழ்நாளின் மிகச்சிறந்த கௌரவமாகும்.

தினக்கூலித் தொழிலாளியின் மகனாக இருந்து, மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றது எனது வாழ்நாளின் மிகப்பெரிய பாக்கியமாகும்.

எல். முருகன்

எல். முருகன்

இப்போது, நான் மீண்டும் அடித்தட்டு மக்களிடம் சென்று, நமது கட்சித் தொண்டர்களுடன் இணைந்து நின்று, 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகத் தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் பணியில் என்னை முழுநேரமாக அர்ப்பணிக்க விரும்புகிறேன். முதலில் நாடு, அடுத்து கட்சி, கடைசியில் தன்னலம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *