யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு மின்சாரமா? இது யார் வீட்டுக் காசு சார்?” – தவெக அரசை விமர்சித்த ஸ்டாலின் | DMK Stalin slams vijay’s tvk government over electricity shortage

Spread the love

“த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!” என்று தவெக அரசை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்! இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?

இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்கு பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *