தகவல் அறிந்த தருமபுரி நகரக் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சொந்த ஊரில் அந்தச் சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்ததும், அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான 30 வயதான அருண்குமார் என்பவருடன் ஏற்பட்ட நட்பில் சிறுமி கர்ப்பமடைடைந்ததும் தெரிய வந்தது.
மேலும், சிறுமி கர்ப்பமான விஷயத்தைத் தெரிந்துகொண்ட தாயும், பாட்டியும் மன விரக்தி அடைந்து தருமபுரிக்கு வந்தவர்கள், ரயில் நிலையம் அருகே எலி பேஸ்ட்டை உண்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இந்த வழக்கு பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் கர்ப்பத்துக்குக் காரணமான அருண்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது பிறந்த குழந்தை உள்ளிட்ட 4 பேரும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தருமபுரி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.