இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அனுபவ் சின்கா இயக்கத்தில் அவர் நடித்த ‘அஸி’ என்ற திரைப்படம் வெளியானது.
தொடர்ந்து திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ஃபிட்டான புகைப்படங்களைப் போடுவதற்காக தயவுசெய்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாதீர்கள்’ என்று பெண்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.
இது குறித்து நடிகை டாப்ஸி “ என்னுடைய அடி வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க வரம்பிற்கும் மீறி உடற்பயிற்சி செய்து என்னை நானே பலமுறை துன்புறுத்தி இருக்கிறேன்.
ஏனெனில் நான் தட்டை (Flat) ஆன உடலமைப்பு கொண்டவளாகவே வளர்ந்ததால், அப்படி இருப்பதே அழகு என நினைத்தேன். ஆனால் அது தவறானது என்பதை தற்போது உணர்ந்துள்ளேன்.