இந்நிலையில் எதிர்கட்சியினர் நடத்திய போராட்டம் குறித்து சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி பேசியிருக்கிறார்.
“பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்தில் நேர்மை இல்லை. பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது. இது விழிப்படைந்த இந்தியா.
நேர்மையற்றவர்களை நாட்டின் இளைஞர்கள் தூக்கி எறிவார்கள். ஒவ்வொரு அரசியல் தலைவரும் வார்த்தைகளோடு நிற்காமல் அதைச் செயலில் காட்ட வேண்டும் என்பதை இந்த இயக்கம் உணர்த்தியுள்ளது.

இனி அவர்கள் தவறான தகவல்களைக் கூறி ஏமாற்றவோ அல்லது நேர்மையின்றி நடக்கவோ முடியாது. எங்களைப் பொறுத்தவரை இங்கு எதிர்க்கட்சியும் இல்லை, ஆளும் அரசாங்கமும் இல்லை.
எங்களைப் பொறுத்தவரை நாடாளுமன்றமே நாட்டின் மிக உயர்ந்த அமைப்பு. நாடாளுமன்றம் கல்வியை ஒரு அடிப்படைப் பிரச்சனையாகக் கருதி கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
சுயநல நோக்கங்களுடன் யார் வந்தாலும் அவர்கள் வழியிலேயே வீழ்வார்கள். ஏனெனில் இந்த இயக்கம் தூய்மையான எண்ணத்திலிருந்தும் நேர்மையிலிருந்தும் உருவானது”என்று எதிர்கட்சியை சாடியிருக்கிறார்.