தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24) தலையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணியும் குரல் கொடுத்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தூத்துக்குடி நகரம், தென்பாகம் காவல்நிலையக் காவலர்களால், சட்டவிரோதமாக மது வணிகம் செய்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் தலை உள்ளிட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அருணாச்சலத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.