பிரபாகரனை சந்தித்த அனுபவம்; விகடன் பேட்டியில் பகிர்ந்த பாரதிராஜா|Bharathiraja Shared Rare Insights on Meeting LTTE Leader

Spread the love

2008-ம் ஆண்டு விகடனின் “தடம்’ இதழில் இயக்குநர் பாரதிராஜாவின் பேட்டி இடம்பெற்றிருந்தது.

அந்தப் பேட்டியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது குறித்து, “எவ்வளவு பெரிய தலைவன் பிரபாகரன். ஈழம் சென்றபோது, எல்லா இயக்கக் கட்டுப்பாடுகளையும் தளர்த்திக்கொண்டு என்னை கட்டியணைத்துக் கொண்டார்.

தமிழ்ச்செல்வன்தான் என்னை அழைத்துச் சென்றார். பிரபாகரன், தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான், சூசை நால்வருடனும் ஒரே நேரத்தில் அமர்ந்து பேசுவது என்பது மிகப் பெரிய விஷயம்.

அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று பகிர்ந்த பாரதிராஜா, பிரபாகரனுக்கு தன் மீதிருந்த அன்பு குறித்து…

பாரதிராஜா

பாரதிராஜா

” ‘மண்வாசனை’ படம் வெளியானபோது மதுரையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போதே உங்களைச் சந்திக்க முயற்சித்தேன். பின்னொரு முறை வீரமணி அண்ணனிடம் சொல்லி சந்திக்க முயற்சித்தேன்.

முடியாமல் போய்விட்டது. நான் உங்கள் ரசிகன். நீங்கள் வருகிறீர்கள் என்றதும் உங்களிடம் பேசுவதற்காக ‘கண்களால் கைது செய்’ படம் வரை அத்தனைப் படங்களையும் போட்டுப் பார்த்தேன்’ என்றார் பிரபாகரன்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *