பிரேசிலில் லுலா டா சில்வா வெற்றி.. இந்தியாவுக்கு கிடைத்த பாசிட்டிவ் சிக்னல்! உற்று நோக்கும் டிரம்ப்! | Lula Wins Brazil Presidential Election; Victory Signals Positive Momentum for India

Spread the love

International

oi-Halley Karthik

பிரசிலியா: பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லுலா ட சில்வா வெற்றி வெற்றிருக்கிறார். இந்த வெற்றி, அமெரிக்காவை குறிப்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அமதிர்ச்சியடைந்திருக்கிறார். மறுபுறம் இந்த வெற்றி இந்தியாவுக்கு பாசிஸ்டிவ் சிக்னலாக அமைந்திருக்கிறது.

பிரேசில் தேர்தலில் போல்சனாரோதான் வெற்றிப்பெறுவார் என்று பலரும் நினைத்திருந்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மிக நெருங்கிய சர்வதேச கூட்டாளியாக இவர் இருக்கிறார்.

Lula

எனவே இவர் வெற்றி பெறுவது ட்ரம்புக்கு மிக முக்கியமானதாக இருந்தது. ஆகவே இவருக்கு ஆதரவாக ட்ரம்ப் தரப்பு மிகப்பெரிய அளவில் பிரச்சாரங்களை செய்தது. ஆனால், கடைசியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 1989க்கு பிறகு பிரேசில் தேர்தல் வரலாற்றில்.. இந்த முறை ஒரு அதிசயம் நடந்திருக்கிறது என்பதுதான். அதாவது முதல் சுற்றில் இரண்டாம் இடத்தை பிடித்த இடதுசாரி வேட்பாளர் சில்வா, இரண்டாம் சுற்றில் மொத்த வாக்குகளையும் தனக்கு சாதகமாக ஈர்த்து.. அதிரடியாக வெற்றி பெற்றிருக்கிறார். பிரேசில் தேர்தல் வரலாற்றில் இப்படி நடப்பது கிடையாது. கடைசியாக 1989 இல் தான் இதுபோன்று நடந்தது. அதன் பிறகு இப்படி ஒரு மாற்றம் நடந்திருப்பதை மக்கள் அதிசயமாக பார்க்கின்றனர்.

இந்த வெற்றி ஒரு பக்கம் அமெரிக்காவுக்கு எரிச்சலாக இருந்தாலும், மறுபக்கம் இந்தியாவுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம் பிரிக்ஸ் அமைப்பில் பிரேசிலின் பங்கு தான்.

சர்வதேச அளவில் வர்த்தகங்களை செய்யும்போது.. அமெரிக்க டாலருக்கு பதிலாக சொந்த நாட்டு நாணயங்களை பயன்படுத்த பிரிக்ஸ் முயற்சி செய்து வருகிறது. இதற்கு பிரேசில் புஃல் சப்போர்ட். இந்த முயற்சி இந்தியாவுக்கு பெரிய நிம்மதியை கொடுத்திருக்கிறது. சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்க சொந்த நாட்டு கரன்சியில் வர்த்தகம் செய்ய வேண்டும். அந்த வகையில் பிரேசிலின் சப்போர்ட் இந்தியாவுக்கு பாசிட்டிவாக உள்ளது.

ஒருவேளை பிரேசில் தேர்தலில் சில்வா வெற்றி பெறாமல், வலதுசாரி ஆதரவாளர் வெற்றி பெற்றிருந்தால்.. இந்த முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டிருக்கும். சீனாவும், பிரேசிலும் இணைந்து.. ஆசிய, ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்கா நாடுகளை ஒருங்கிணைத்து.. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற மேற்கத்திய கட்டுப்பாட்டில் உள்ள நிதி நிறுவனங்களின் பிடியில் இருந்து விடுபட புதிய யுக்திகளை வகுத்து வருகின்றன.

இந்த திட்டம் வெறுமன சொந்த நாணயத்தில் வர்த்தகம் என்பதை தாண்டி.. பிரிக்ஸ் நாடுகளுக்கு என பொதுவான கரன்சியை உருவாக்கும் நோக்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு வெளிப்படையாக இதில் விருப்பமில்லை என்றாலும், அமெரிக்க டாலருக்கு பதிலடி கொடுக்க வேண்டுமெனில்.. நிச்சயமாக ஒரு மாற்றுக் கரன்சி தேவைப்படுகிறது. எனவே பிரிக்ஸ் கரன்சியை இந்தியா ஆதரிக்கும் நிலைக்கு போகத்தான் வேண்டும்.

இப்படி எல்லா பக்கமும் அமெரிக்காவுக்கு எதிராக, சொந்த நாடுகளில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு.. பிரேசிலும், சீனாவும் வேலை பார்த்து வரும் நிலையில் பிரேசில் தேர்தலில் லூலா தோல்வி அடைந்திருந்தால் நிலைமையை தலைகீழாக மாறி இருக்கும் என்பதை குறிப்பிடப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *