பணியாளர் ஓய்வுக் கால விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது எம்ப்ளாயிஸ் பென்ஷன் ஃபண்ட் நிறுவனம். ஒரு பணியாளர் 55 வயதில் தனது பி.எஃப் கணக்கில் இருக்கும் 90% பணத்தைத் திரும்ப எடுக்கலாம் என்கிற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், ஒரு பணியாளர் இரண்டு மாதங்களாக வேலை இல்லாத பட்சத்தில், அவருடைய பி.எஃப் கணக்கிலிருந்தும் பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்றும் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

பி.எஃப் எனும் கட்டாயச் சேமிப்பு!
பொதுவாக, ஒரு பணியாளர் 58 – 60 வயதாகி ஓய்வு பெற்றபிறகு அந்த ஓய்வுக் காலத்தில் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பென்ஷன் ஃபண்ட் என்பது உருவாக்கப்பட்டது. இதன்படி ஒரு பணியாளர் எந்த நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் அவருடைய மாதச் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை ஓய்வுக் காலத்தில் பயன்படுத்தும்படியான சேமிப்பாகக் கட்டித்தான் ஆகவேண்டும். எல்லா நிறுவனங்களும் இந்த பி.எஃப் பிடித்தத்தைக் கட்டாயம் செய்தாக வேண்டும்.
இப்படிச் சேர்க்கும் பணத்துக்கு ஆண்டுதோறும் 8.2% வட்டி கிடைக்கும் என்பதுடன், ஓய்வுக் காலத்தில் மொத்தப் பணத்தையும் திரும்ப எடுக்கும்போது வரி எதுவும் கட்டத் தேவை இல்லை. பாதுகாப்பான சேமிப்பு, ஓரளவு வட்டி, வரி இல்லை ஆகிய பல பாசிட்டிவ்-ஆன விஷயங்களால் பலரும் இந்த சேமிப்பை மிகவும் விரும்பினார்கள். இந்த பி.எஃப் திட்டத்தில் ஒருவரின் சம்பளத்தில் பெரும்பகுதியை ‘வாலண்டரி பென்ஷன் ஃபண்ட்’ மூலம் கூடுதலாகவும் சேர்க்கலாம் என்பதால், பலரும் இதில் அதிகமான பணத்தை சேர்த்து வருகின்றனர்.

அரசின் சவால்!
பல லட்சம் பணியாளர்கள் பென்ஷன் ஃபண்டில் இப்படிப் பணத்தை சேர்த்து வருவதால், பல லட்சம் கோடி ரூபாய் இந்தக் கணக்கில் சேர்ந்துள்ளது. இவ்வளவு பணத்துக்கும் ஆண்டுதோறும் 8.2% வட்டி தருவது மத்திய அரசுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. இதனால் பி.எஃப் தொடர்பான விதிமுறைகளைத் தளர்த்தி, பணியாளர்கள் சில கண்டிஷன்களுக்கு உட்பட்டிருந்தால், பி.எஃப் பணத்தில் இருந்து எளிதாகப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்கிற நிலையை உருவாக்கி இருக்கிறது.

மாறிய விதிமுறைகள்!
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள❤️ புதிய விதிகளின்படி, ஒருவர் 55 வயதானபின் தனது பி.எஃப் சேமிப்பில் இருந்து 90% பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். முன்பு 75% அளவுக்கு மட்டுமே திரும்ப எடுக்க முடியும் என்கிற நிலை இருந்தது.
அது மட்டுமல்ல, ஒருவர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலை இல்லாமல் இருக்கும் நிலையில், பி.எஃப் சேமிப்பில் இருந்து 90% பணத்தைத் திரும்ப எடுக்க முடியும். முன்பு இந்தக் காத்திருப்புக் காலம் 12 மாதங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவச் சிகிச்சைக்கான செலவு, கல்விக் கட்டணச் செலவு, திருமணத்துக்கான செலவு, வீடு, அடுக்குமாடி வீடு, மனை வாங்குவதற்கான செலவு ஆகிய காரணங்களுக்காக பி.எஃப் சேமிப்பில் இருந்து பணத்தைத் திரும்ப எடுக்க முடியும். இ.பி.எஃப்.ஒ போர்ட்டல் மூலம் பி.எஃப் சேமிப்பில் இருக்கும் பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளப் பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

பணம்
சாதகமா, பாதகமா?
பி.எஃப் தொடர்பான விதிமுறைகள் சில தளர்த்தப்பட்டு இருப்பது, பணியாளர்களுக்கான சாதகமான விஷயம் என்றே சொல்லலாம். பி.எஃப் கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம் சேர்த்து வைத்திருக்கும்போது, அந்தப் பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாமல், அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் அவல நிலையை இந்த விதிமுறை மாற்றம் தடுக்கிறது.
அதே நேரத்தில், வேறு சில காரணங்களால் இந்த விதிமுறை மாற்றங்கள் பணியாளர்களுக்குப் பாதகமாகவும் அமையும். ஓய்வுக் காலத்துக்கென சேமித்து வைத்த பணத்தை முன்கூட்டியே எடுத்துவிடுவதால், ஓய்வுக் காலத்திற்குத் தேவையான பணம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். அப்போது திடீர் செலவு வந்தால், வருமானம் இல்லாத காலத்தில் அதிக வட்டிக்குக் கடன் வாங்கித் திரும்பக் கட்ட வேண்டிய அவஸ்தைக்கு உள்ளாவோம்!

பணியாளர்கள் என்ன செய்யலாம்?
ஓய்வுக் காலத்துக்கான பணத்தைச் சேர்க்க, முன்பு பி.எஃப் மட்டுமே ஒரே வாய்ப்பாக இருந்தது. ஆனால், தற்போது மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகள் எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கிறது. ஒருவர் வேலைக்குச் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே தன் ஓய்வுக் காலத்துக்காக மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பணம் சேர்க்கத் தொடங்கலாம்! 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என ஓய்வுக் காலத் தேவைக்காக மியூச்சுவல் ஃபண்ட் மூலம் ஒருவர் பணம் சேர்த்தால், அதிகமான பணத்தை சேர்க்க முடியும். பி.எஃப்-ல் சேர்க்கும் பணத்துக்கு அதிகபட்சம் 8.2% மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் சேர்க்கப்படும் பணத்துக்கு நீண்ட காலத்தில் ஆண்டுதோறும் 10% – 12% வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், 40 – 50 வயதுக்குக் கீழே இருப்பவர்கள் இனியும் பி.எஃப் சேமிப்பை மட்டும் நம்பி இருக்காமல், மியூச்சுவல் ஃபண்டிலும் நீண்ட கால அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்ப்பது அவசியத்திலும் அவசியம்!

மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க….
மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!
ஏ.ஆர்.குமார் – 89259 44568
சபரிநாதன் – 89259 44569
தங்கலட்சுமி – 95007 77894
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்…
வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!
Vikatan Wealth Pvt Ltd – ARN – 310095
பி