மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர்.சி, திமுக சார்பில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தவெக முஸ்தபா, நாதக-வில் அப்துல் ஹக்கீம் ஆகியோர் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளராக சுந்தர்.சி அறிவிக்கப்பட்டவுடனேயே, கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து, தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டார். ஆனாலும் வெளியூர்க்காரர், நடிகர் என்பதால் எளிதாக அணுக முடியாதோ என்கிற பிரச்னையால் தொகுதி மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதில் தயக்கம் காட்டி வந்தனர். `நான் வெற்றி பெற்றால் மதுரையில்தான் இருப்பேன்” என வீதி வீதியாகப் பிரசாரம் செய்தார் சுந்தர்.சி. இதனால் தொகுதி மக்களிடையே சுந்தர்.சி மீது நம்பிக்கை ஏற்பட்டது
பி.டி.ஆர், சுந்தர்.சி இருவரையும் முந்திய தவெக வேட்பாளர்; ஸ்டார் தொகுதியில் விசில் பறந்தது எப்படி? | Surpassing both PTR and Sundar C, the TVK takes the lead in madurai central constituency