பீகார்: சுற்றுலா மையத்தில் பெண்ணைக் காலணியால் தாக்கிய கும்பல்; அதிர்ச்சி வீடியோ… போலீஸ் விசாரணை!

Spread the love

பீகாரில் அடிக்கடி பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் அது போன்ற இரண்டு சம்பவங்கள் நடந்தன. தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீகாரின் சுற்றுலா மையமாக கருதப்படும் பங்கா என்ற இடத்தில் இருக்கும் மந்தர் மலையில் ஒரு பெண் 6 பேர் கொண்ட கும்பலால் காலணியால் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் அடையாளம் தெரியாத 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பெண் மீது 6 பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானது.

அந்த வீடியோ போலீஸ் அதிகாரி பங்கஜ் குமார் ஜாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்தது. இதையடுத்து பங்கஜ் குமார் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். மொத்தம் ஆறு பேர் அந்த இளம் பெண்ணுடன் அநாகரிகமான நடத்தை மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வீடியோவில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் இருவரையும் அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து மந்தர் மலைக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் காணப்பட்ட ஆண்கள் இளைஞர்களாகத் தோன்றினாலும், அவர்களைத் தெளிவாக அடையாளம் காண முடியவில்லை என உள்ளூர் கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அடையாளம் தெரியாத ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வைரலான வீடியோவை போலீஸார் விசாரணையில் முக்கிய ஆதாரமாக சேர்த்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து மந்தர் சுற்றுலா மையத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

வியாழன் அன்று, பீகாரின் சமஸ்திபூரில் மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட குழு ஒரு பெண் மற்றும் ஓர் இளைஞரைச் சுற்றிவளைத்து அவர்களை வாய்மொழியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்திய வீடியோ வைரலானது. இதையடுத்து குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *